சென்னை பெருநகரின் 3-வது முழுமை திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பு ஆலோசனை கூட்டம்

சென்னை பெருநகரின் 3-வது முழுமை திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பு ஆலோசனை கூட்டம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.;

Update:2023-10-20 18:57 IST

சென்னை பெருநகரின் 3-வது முழுமை திட்டத்திற்காக பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்கும் பணி நடைபெற்று, 40 ஆயிரத்து 362 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 3-ம் முழுமைத் திட்ட தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பின் ஒரு பகுதியாக துறைச்சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் வல்லுனர்களிடம் இருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெறுவதற்கான ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பனீந்திர ரெட்டி, சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ர.சுதாகர், சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் கமிஷனர் (வருவாய் (ம) நிதி) ரா.லலிதா, இணை கமிஷனர் (பணிகள்) கீ.சு.சமீரன், போக்குவரத்து கமிஷனர் அ.சண்முக சுந்தரம், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர் செ.சரவணன், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய சிறப்பு அலுவலர் ஐ.ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், உலக வங்கி பிரதிநிதிகள் மற்றும் தனியார் நிறுவன கலந்தாலோசகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்