விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

திருவாரூரில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

Update: 2023-09-16 18:45 GMT

திருவாரூரில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு, முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், வெள்ளத்துரை மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைதியான முறையில் நடத்திட வேண்டும். அதற்கான முன்னேற்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் உரிய கவனம் செலுத்திட வேண்டும் என்றார்.

ரோந்து வாகன உபகரணங்கள்

இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் புகைப்பட பிரிவு, தனிவிரல் கைரேகை பிரிவு மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகன உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Tags:    

மேலும் செய்திகள்