பொற்கொடியம்மன் ஏரி திருவிழா குறித்து கருத்து கேட்பு கூட்டம்

பொற்கொடியம்மன் ஏரி திருவிழா நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-27 16:56 GMT

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் வல்லண்டராமம் பொற்கொடியம்மன் மற்றும் வேலங்காடு ஏரி திருவிழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெறும் இந்த திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்த திருவிழாவை நல்ல முறையில் நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். வேலங்காடு, பனங்காடு, அன்னாச்சிபாளையம், வல்லண்டராமம் ஆகிய கிராமங்களைச் சார்ந்த முக்கிய மேட்டுக்குடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள் மே மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறும் திருவிழாவை சிறப்பாக நடைபெற வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்களை கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்