முதியோர் பாதுகாப்பு சட்டங்கள்,உதவி எண்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
முதியோர் பாதுகாப்பு சட்டங்கள்,உதவி எண்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் உதவி எண்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை எப்படி செய்வது என்பது குறித்து பேசினார். மேலும் மாநில ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி முதியோர் உதவி எண் 14567 பற்றியும், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு சட்டம் 2007 பற்றியும் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு நல அலுவலர் ரவி பாலா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்.