வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் வளா்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-09 18:54 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் வளா்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் சங்கரன், மாநகரட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் கூறியதாவது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போதிய கழிப்பறைகள் இல்லை. உரிய முறையில் பராமரிப்பது இல்லை. வார்டு பகுதியில் குப்பைகள் குவிந்துள்ள நிலையில் போதிய தூய்மை பணியாளர்கள் இல்லை.

புதிய பஸ்நிலையம்

நகரில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. திருத்தங்கலில் கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வாராமல் இருக்கும் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.

கூட்டத்தில் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், தாசில்தார் லோகநாதன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்