கட்டிட தொழிலாளி தற்கொலை

கட்டிட தொழிலாளி தற்கொலை

Update: 2023-05-10 19:30 GMT

கோவை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுப்புராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் கதிரேசன் (வயது 20). இவர் கடந்த 3 மாதங்களாக கோவை புது சித்தா புதூர் ரங்கநாதன் வீதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கதிரேசன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள கதிரேசன் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனவருத்தம் அடைந்த அவர், தங்கி இருந்த அறையில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்