மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

பாவூர்சத்திரத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.

Update: 2023-01-31 18:45 GMT

பாவூர்சத்திரம்:

சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜ் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அண்ணாமலை என்ற செல்வம் (வயது 40). கட்டிட தொழிலாளியான இவர் பாவூர்சத்திரம் கடையம் ரோட்டில் உள்ள வீட்டில் கட்டிட பணி செய்து வந்தார். அப்போது அங்கிருந்த குளியறையில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டார். மாலை நேரத்தில் வெளிச்சத்திற்காக தற்காலிகமாக டியூப்லைட் பயன்படுத்தியபோது எதிர்பாராதவிதமாக செல்வம் மீது மின்சாரம் தாக்கியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான செல்வத்திற்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்