கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குளச்சல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குளச்சல்:
குளச்சல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கட்டிட தொழிலாளி
குளச்சல் அருகே உள்ள கோணங்காடு ஆலுவிளையை சேர்ந்தவர் மரிய சூசை. இவருடைய மகன் ஜாண் சுதர்சன் (வயது 37). இவர் கடந்த 7 ஆண்டுகளாக வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியான வேலை செய்து வந்தார்.
ஜாண் சுதர்சன் 7 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பி வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும், இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜாண் சுதர்சன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் தாயாரின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாயார் மேரி தங்கம் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஜாண்சுதர்சன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.