கழிவறை கட்டும் பணி
பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை கட்டும் பணி நடந்து வருகிறது.
பாபநாசம் திருப்பாலத்துறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகள் குறித்து ஒப்பந்ததாரர் சரண், எம்.எல்.ஏ.விடம் விளக்கினார். ஆய்வின்போது பாபநாசம் பேரூராட்சி உறுப்பினர் ஜாபர் அலி, மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் பாரூக் மஹராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.