ரூ.1¾ கோடியில் தார் சாலை அமைக்கும் பணி

கந்திலி பகுதியில் ரூ.1¾ கோடியில் தார் சாலை அமைக்கும் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

Update: 2023-07-13 17:44 GMT

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் கந்திலி பகுதியில் உள்ள சின்னகசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் சின்னகசிநாயக்கன்பட்டி சாலை முதல் ஜல்லியூர் இணைப்பு சாலை வரை ரூ.44½ லட்சத்திலும், கிழக்குபதனவாடி ஊராட்சி பள்ளத்தூர் பதனவாடி சாலை முதல் அனுமன்பட்டி இணைப்பு சாலை வரை ரூ.28½ லட்சத்திலும், பெரிய கண்ணாலபட்டி ஊராட்சி சின்னகண்ணாலபட்டி சாலை முதல் ராஜாவூர் சாலை வரை ரூ.35 லட்சத்திலும், சுந்தரம்பள்ளி ஊராட்சி சானிபட்டி சாலை முதல் கைலாசம்பள்ளம் சாலை வரை ரூ.34½ லட்சத்திலும், நத்தம் காலனி சாலை முதல் புதுப்பட்டி சாலை வரை ரூ.15 லட்சத்திலும் மொத்தம் ரூ.1 கோடியே 70 லட்சத்தில் தார் சாலைகள் அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகளை பூஜை செய்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கந்திலி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஜி.மோகன்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கே.என்.நேரு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி முன்னிலை வைத்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமயேந்திரன் வரவேற்றார்.

தார்சாலை பணிகளை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கிவைத்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சி.கே.சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தகுமார், சாந்தா சண்முகம், பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமாறன, ராணி சின்னகண்ணு, பெருமாள், துணைத்தலைவர் அண்ணாமலை, பிரேம்குமார் செல்வராஜ், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஒன்றிய பொறியாளர் செல்வி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்