ரூ.2¾ கோடியில் பொதுப்பணித்துறை அலுவலக கட்டுமான பணி
தியாகதுருகம் அருகே ரூ.2¾ கோடியில் பொதுப்பணித்துறை அலுவலக கட்டுமான பணி வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தியாகதுருகம்
கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் கோட்ட அலுவலக கட்டிட கட்டுமான பணிகள் தொடக்க விழா தியாகதுருகம் புறவழி சாலை அருகே நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், பேரூராட்சி தலைவர் வீராச்சாமி, துணைதலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மலையரசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிசிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு ரூ.2 கோடியே 73 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் கோட்ட அலுவலக கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். 9,135.24 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் இந்த கட்டிடம் கீழ் தளம், முதல் தளம் மற்றும் 2-வது தளம் என 2 மாடிகளுடன் கட்டப்படுகிறது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், அவைத்தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் மடம்பெருமாள், பாலாஜி அஜித்குமார், ரத்தினவேல், சிலம்பரசன், ராஜா, ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.