அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே கொறுக்கை கால்நடை பண்ணை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் சுற்றுச்சுவர்கள் கட்டப்படவில்லை. கல்லூரியின் முன் பகுதியில் கட்டப்பட்ட சுவரும் இடிந்து விழுந்தது.இந்த கல்லூரியை சுற்றி வயல் பகுதி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் விஷ பூச்சிகள் கல்லூரிக்குள் நுழையவாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலிடெக்னிக் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.