மாவட்டத்தில் 22 பள்ளிகளில் ரூ.6¾ கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி

நாமக்கல் மாவட்டத்தில் 22 பள்ளிகளில் ரூ.6 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Update: 2023-02-01 18:45 GMT

புதிய வகுப்பறை கட்டிடம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.6 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 22 புதிய பள்ளி வகுப்பறை கட்டடிங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் கொண்டாங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உஞ்சனை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குட்டிக்காப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சக்கராம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் தலா 2 வகுப்பறை கட்டிடங்களும், கோக்கலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3 வகுப்பறை கட்டிடங்களும் கட்டப்பட உள்ளன.

பொத்தனூர் பேரூராட்சி வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4 வகுப்பறை கட்டிடம், குண்டூர் நாடு ஊராட்சி தென்னூர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம், கூடுதுறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை பள்ளி கட்டிடம், சப்பையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 வகுப்பறை கட்டிடம், ஹரிஜன் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம், மொரங்கம் தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம், கொட்டப்பாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் செட்டிச்சிப்பாளையம் தொடக்கப்பள்ளிகளில் தலா 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட உள்ளது.

முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

ராசம்பாளையம் தொடக்கப்பள்ளியில் 3 வகுப்பறை கட்டிடம், ஓலப்பாளையம் தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம், பிள்ளாநல்லூர் தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம், கரிப்பனூர் தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம், பொட்டணம் தொடக்கப்பள்ளியில் 3 வகுப்பறை கட்டிடம், தாண்டகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம், பெரியபள்ளம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம், சித்தாளந்தூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 வகுப்பறை கட்டிடம் என மொத்தம் 22 பள்ளிகளில் ரூ.6.85 கோடி மதிப்பில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

இதையொட்டி சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொட்டணம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்