காட்டுமன்னார்கோவிலில்இலங்கை அகதிகளுக்கு ரூ.3½ கோடியில் வீடுகள் கட்டும் பணிகலெக்டர் பாலசுப்பிரமணியம், சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. ஆய்வு

காட்டுமன்னார்கோவில் இலங்கை அகதிகளுக்கு ரூ.3½ கோடியில் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம், சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.;

Update:2023-01-04 00:15 IST

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் குப்பங்குழி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 72 குடும்பங்களை சேர்ந்த இலங்கை அகதிகள் வசித்து வருகிறார்கள். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் அவதிப்பட்ட அகதிகள் தங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டி தர வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் இலங்கை அகதிகள் வசிக்க ஏதுவாக உடையார்குடியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.3½ கோடி திட்ட மதிப்பீட்டில் தலா ரூ.5 லட்சத்தில் 72 வீடுகள் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் வீடுகளை தரமாக கட்டுவதோடு, சாலை, தெருமின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், பாலகிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர்கள் சந்தானகிருஷ்ணன், அருள்மொழி செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், பானுமதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்