ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி

தெற்கு நாங்குநேரியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெறுகிறது;

Update:2022-11-23 03:03 IST

இட்டமொழி:

தெற்கு நாங்குநேரி ஊராட்சியில் 2000 மக்கள் தொகையை கொண்ட பெரும்பத்து மற்றும் இந்திரா காலனி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து புதிய ஆழ்குழாய் மூலம் குடிதண்ணீர் கொடுப்பதற்காக நாங்குநேரி யூனியன் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் இடத்தை நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தெற்கு நாங்குநேரி பஞ்சாயத்து தலைவர் சகுந்தலா மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக எஸ்.ஆரோக்கிய எட்வின் மன்னார்புரத்தில் கல்லறை தோட்டத்துக்கு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கு தந்தை எட்வர்ட், பஞ்சாயத்து தலைவர் சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர் அகஸ்டின் கீதராஜ், ஆசிரியர் ஜஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்