தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-01-11 17:39 IST

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமிகளின் சமாதி வளாகத்தில் ஆண்டுதோறும் ஆராதனை விழா நடைபெறுகிறது. அவ்வகையில் தியாகராஜர் சுவாமிகளின் 178-வது ஆராதனை விழா வரும் 14ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்