அண்ணாநகர் மண்டலத்தில் ரூ.6.20 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணி

அண்ணாநகர் மண்டலத்தில் ரூ.6.20 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

Update: 2023-01-31 09:27 GMT

சென்னை அண்ணாநகர் மண்டலம், 98-வது வார்டுக்கு உட்பட்ட ஆஸ்பிரன் கார்டன் பகுதியில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2-வது தெரு மற்றும் கீழ்ப்பாக்கம் கார்டன் தெருவை இணைக்கும் இடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.6.20 கோடி மதிப்பில் புதிதாக பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.


உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், ஆஸ்பிரன் கார்டன் 2-வது தெரு மற்றும் கீழ்ப்பாக்கம் கார்டன் தெருவை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள குறுகலான கீழ்மட்ட பாலத்தை இடித்துவிட்டு 17.60 மீட்டர் நீளம், 11.50 மீட்டர் அகலம் (இருபுறமும் நடைபாதையின் அகலம் 1.5 மீட்டர் உள்பட) கொண்ட புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.எல்.ஏ. வெற்றி அழகன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் (பணிகள்) பிரசாந்த், மத்திய வட்டார துணை கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமை பொறியாளர் காளிமுத்து, கவுன்சிலர் பிரியதர்ஷினி உள்பட பலர்கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்