ரூ.1¼ கோடியில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரம்

மங்குழி ஆற்று வாய்க்கால் குறுக்கே ரூ.1¼ கோடியில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-03-30 18:45 GMT

கூடலூர்

மங்குழி ஆற்று வாய்க்கால் குறுக்கே ரூ.1¼ கோடியில் புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நிதி ஒதுக்கீடு

கூடலூர் அருகே மங்குழி பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆற்று வாய்க்கால் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் பாலமும் பழுதடைந்து காணப்பட்டது. கடந்த ஆண்டு வெள்ளத்தில் பாலம் உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் கூடுதலாக பயணம் செய்து கூடலூர் நகருக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் நகராட்சி நிர்வாகம் கடந்த மாதம் ரூ.1 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து பூமி பூஜையும் போடப்பட்டது. இந்த நிலையில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

புதிய பாலம்

இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் பாலம் கட்டும் இடத்தில் தூர்வாரப்பட்டு அடித்தளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வருகிற ஜூன் மாதத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இல்லையெனில் மழைக்காலம் தொடங்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் கட்டுமான பணி பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.

இதனிடையே பாலம் கட்டும் இடத்தில் 2 மின் கம்பங்கள் உள்ளதால், அதை வேறு இடத்துக்கு மாற்ற மின்வாரியத் துறையிடம் நகராட்சி நிர்வாகம் விண்ணப்பித்து உள்ளது. இதனால் மின் கம்பங்களை அகற்றிய பிறகு, பாலம் கட்டுமான பணி இன்னும் விரைவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்