வாகனம் மோதி கட்டிட மேஸ்திரி பலி

மோகனூர் அருகே வாகன மோதி கட்டிட மேஸ்திரி இறந்தார்.

Update: 2023-08-23 18:45 GMT

மோகனூர்

கட்டிட மேஸ்திரி

மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று அதிகாலை தனது மனைவி பிரேமாவிற்கு காதுவலி என்பதால், தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மோகனூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

செல்லிபாளையம் அருகே வளைவில் திரும்பும்போது எதிரே வந்த வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்ததில், பெரியசாமி பலத்த காயமடைந்தார். பின்னர் பிரேமா அந்த வழியாக சென்றவர்களின் உதவியுடன் பெரியசாமியை காப்பாற்றி சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இதுகுறித்து பிரேமா மோகனூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையசூரியன் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி மீது மோதிவிட்டு சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். பெரியசாமியின் உடல் நாமக்கல் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இறந்த பெரியசாமிக்கு அனீஸ், ஆகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்