பென்னாகரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி சாவு
பென்னாகரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி இறந்தார்.
பென்னாகரம்:
நல்லம்பள்ளி அருகே உள்ள கரியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 57), கட்டிட மேஸ்திரி. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது உறவினரான கந்தசாமியின் புதிய வீட்டின் கட்டுமான பணிக்கு வேலைக்கு வந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முருகனை மின்சாரம் தாக்கியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட உறவினர்கள் கதறி அழுதனர். இது தொடர்பாக முருகனின் மனைவி புஷ்பராணி கொடுத்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.