ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை

சமுக்தியாம்பிகை கோவிலில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை நடந்தது.

Update: 2022-08-13 16:51 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த அங்கலகுறிச்சி தாடகைமலை அடிவாரத்தில் ஆத்மநாதவனம் உள்ளது. இங்கு சமுக்தியாம்பிகையம்மன், சரபேஸ்வரர், காலபைரவர் ஆகியோர் தனி, தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் நடைபெற்று வரும் கோரிக்கை தேங்காய் வழிபாடு, தேய்பிறை அஷ்டமி பூஜை ஆகியவை சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில் கோவிவில் ஸ்ரீசக்கர பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் நடந்தது. நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கிய பிரதிஷ்டை விழாவில் சிகர நிகழ்ச்சியாக ஸ்ரீசக்ர தேவியின் மூல மந்திரம் ஒரு லட்சம் முறை ஜப பாராயணம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து 10 ஆயிரம் முறை மூல மந்திர மகாயாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து மகா தீபாராதனை, அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்ரீசக்கரத்தை வழிப்பட்டால் வியாதிகள் விலகி மனஅமைதி, வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீசக்கரத்தை பக்தர்கள் வணங்கி செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்