லட்சுமி நாராயண சுவாமி சிலை பிரதிஷ்டை
வாலாஜா வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் லட்சுமி நாராயண சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை பசும்பொன் நகரில் உள்ள வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் லட்சுமி நாராயண சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஜல குரு பழனி சுவாமிகள் தத்வார்ச்சனை, தீபாராதனை செய்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு, லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி அறங்காவலர் வாசுதேவன் சுவாமிகள் செய்திருந்தார்.