பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது.;
நாகை மாவட்டம் திருமருகல் அருகே சீயாத்தமங்கையில் உள்ள இருமலர் கண்ணி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று 6-ம் கால யாக சாலை பூஜைக்கு பின்னர் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.