இணைப்பு சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்

இணைப்பு சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-07-30 12:27 GMT

தளி

பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு உடுமலை வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அதன் 2 புறங்களிலும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்ட உள்ளது. இதன் குறுக்காக ஊரக, மாவட்ட, மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. அந்த வகையில் உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டிக்கு செல்லும் சாலையும் இந்த நெடுஞ்சாலையை கடந்து செல்கிறது. இணைப்புச் சாலைகள் வேகத்தடை அமைக்காததால் அசுர வேகத்தில் வரும் வாகனங்கள் குறுக்கு சாலையில் வரும் மற்ற வாகனங்களை கண்டு கொள்ளாமல் செல்கிறது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "விரைவான போக்குவரத்துக்கு ஏதுவாக நெடுஞ்சாலை அமைப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். கூடவே அதன் 2 புறங்களிலும் அமைக்கப்படுகின்ற இணைப்பு சாலைகளுக்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டியது முக்கியமானதாகும். அந்த சாலைகளில் வருகின்ற வாகன ஓட்டிகள் உடுமலை- பெதப்பம்பட்டி சாலையில் வருகின்ற மற்ற வாகனங்களை கண்டு கொள்வதில்லை. மேலும் மேம்பாலம் மறைத்துக்கொள்வதால் வாகனங்கள் வருவதும் தெரிவதில்லை. இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரையிலும் சுமார் 20 சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. எனவே பெரிய விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்பு நெடுஞ்சாலையின் 2 புறங்களிலும் உள்ள இணைப்பு சாலைகளில் வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்