ராஜீவ்காந்தி நினைவு ஜோதிக்கு காங்கிரசார் வரவேற்பு

நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-05-18 19:10 GMT

நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராஜீவ்காந்தி நினைவு ஜோதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடந்த 15-ந்தேதி ராஜீவ்காந்தி நினைவு ஜோதி புறப்பட்டது. ராஜீவ் காந்தி யாத்திரை குழு தலைவர் துரை வேலு தலைமையில் 150 பேர் வாகனங்களில் பயணம் செய்து வருகிறார்கள். ராஜீவ்காந்தி நினைவு ஜோதி வாகனம் மைசூரு, திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக நேற்று மதியம் நெல்லை வண்ணார்பேட்டையை வந்தடைந்தது. அங்கு நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்ககுமார், பரணி இசக்கி, கவி பாண்டியன், மண்டல தலைவர்கள் அனஸ்ராஜா, பி.வி.டி.ராஜேந்திரன், அபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த யாத்திரை வருகிற 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு சென்றடைகிறது.

நாங்குநேரி

ராஜீவ் காந்தி நினைவு ஜோதி நேற்று நாங்குநேரிக்கு வந்தது. தாலுகா அலுவலகம் முன்பு உள்ள நான்கு வழிச்சாலையில் நெல்ைல கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்