இடது கரை கால்வாயை சீரமைக்கக்கோரி காங்கிரசார் போராட்டம்
திற்பரப்பு இடது கரை கால்வாயை சீரமைக்கக்கோரி காங்கிரசார் சார்பில் போராட்டம் நடந்தது.
குலசேகரம்,
திற்பரப்பு இடது கரை கால்வாயை சீரமைக்கக்கோரி காங்கிரசார் சார்பில் போராட்டம் நடந்தது.
போராட்டம்
திற்பரப்பு இடதுகரை கால்வாயை சீரமைத்து தண்ணீர் விடக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று திற்பரப்பு சந்திப்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு திற்பரப்பு பேரூர் காங்கிரஸ் தலைவர் எட்வின் தலைமை தாங்கினார். இதில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், திருவட்டார் மேற்கு வட்டார தலைவர் வினுட்ராய், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸ், மாவட்ட சேவாதள காங்கிரஸ் தலைவர் காஸ்ட்டன் கிளீட்டஸ், மாவட்ட பொதுச் செயலாளர் மோகன்தாஸ், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயசிங், மாநில மீனவரணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மாவட்ட துணைத்தலைவர் ஜான் இக்னேசியஸ், வட்டார பொருளாளர் ஜேம்ஸ்ராஜ், கட்சி நிர்வாகிகள் மோன்சி, ரவி திற்பரப்பு, குலசேகரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.