காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எல்.ஐ.சி மற்றும் ஸ்டேட் வங்கி சொத்துகளை அதானிக்கு தாரை வார்க்கும் மத்திய பா.ஜனதா அரசைக் கண்டித்து நாங்குநேரி தொகுதி சார்பில் பாளையங்கோட்டை- திருச்செந்தூர் ரோடு கிருஷ்ணாபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார்.
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில ஓ.பி.சி. பிரிவு துணைத்தலைவர் வக்கீல் காமராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய பா.ஜனதா அரசையும், அதானி குழுமத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.