காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
உடன்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடன்குடி:
தமிழ்நாடு கவர்னரின் நடவடிக்கைகளுக்கு ஏதிர்ப்பு தெரிவித்து வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் உடன்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.சிவசுப்பிரமணியன், மாவட்ட கலை இலக்கிய அணி மாவட்ட தலைவர் முத்துக்குமார், திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனிஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, மாவட்ட துணைத்தலைவர் சங்கர், நகர தலைவர் முத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.