தேனி அருகே 2-வது நாளாக காங்கிரசார் போராட்டம்

தேனி அருகே 2-வது நாளாக காங்கிரசார் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-27 16:10 GMT

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல், தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் பழனிசெட்டிபட்டியில் காங்கிரஸ் கட்சியினர் 2-வது நாளாக இன்று அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்