காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
ராணிப்பேட்டையில்காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு, அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதனை எதிர்த்து ராகுல்காந்தி குஜராத் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை கண்டிக்கும் விதமாக ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில், நான்குவழி சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் சாலையை மறியலில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், வி.சி.மோட்டூர் கணேசன், மோகன், ராணிவெங்கடேசன், சங்கர்நாயுடு உட்பட பலர் பங்கேற்றனர்.