காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-04-08 18:45 GMT

குத்தாலம்,ஏப்.9-

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் குத்தாலம் கடைவீதியில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜம்புகென்னடி தலைமை தாங்கினார். முன்னாள் வட்டாரத்தலைவர் மணி, மாவட்ட பொதுச்செயலாளர் ரியாத் அகமது, நகரத் தலைவர் சூர்யா, பேரூராட்சி மன்ற உறுப்பினர் நிரஞ்சனி தேவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத்தலைவர் பரதன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் கலந்து கொண்டு பேசினார்.அப்போது ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் கனிவண்ணன், மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் குத்தாலம் பேரூர் செயலாளர் பூர்விகா செந்தில் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்