காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருமக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமக்கோட்டை:
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் திருமக்கோட்டை கடைவீதியில் கோட்டூர் வட்டார காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அன்பு வீரமணி தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ரமேஷ்குமார், பொறுப்பாளர்கள பாண்டியன், வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் தர்மதாஸ், வக்கீல் மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், சண்முகம், ஆனந்தகிருஷ்ணன், மோகன், மாவட்ட தலைவர் விஜயபாண்டியன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.