காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-25 18:45 GMT

கடையம்:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, அவரது எம்.பி. பதவியை பறித்ததை கண்டித்து கடையம் தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முருகன், அழகுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் கண்டன உரையாற்றினார்.

இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிமூலம், வட்டார மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி, வட்டார துணை தலைவர் முருகன், மாவட்ட பொது செயலாளர் ராமையா, தொழிற்சங்க தலைவர் அருணாசலம், வட்டார பொருளாளர்கள் சாத்தா, மாரியப்பன், செயற்குழு உறுப்பினர் பாபு, பழனி, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்