காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
ராணிப்பேட்டை முத்துக் கடையில் நேற்று மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் சத்யாகிரக அறவழி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகர தலைவர் வக்கீல் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர், உள்ளிட்டார் சிறப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கில் இருந்து சோனியா காந்தியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் அமலாக்க துறையை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.