காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பா.ஜனதா கட்சியை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை 10 தலை ராவணன் போன்று சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு விமர்சனம் செய்த பா.ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.