சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
திருவண்ணாமலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்தினர். நிகழ்ச்சிக்கு நகர தலைவர் என்.வெற்றிசெல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார் கலந்து கொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாடவீதியில் காந்திசிலை அருகிலிருந்து புறப்பட்ட இந்த பாதயாத்திரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக செங்கம் சாலையிலுள்ள காமராஜர் சிலையை சென்றடைந்தது. அப்போது பெட்ரோல், டீசல், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பிய படி சென்றனர். இதில் மாவட்ட துணைத் தலைவர் அண்ணாச்சி, மாவட்ட விவசாய அணி தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் வீராசாமி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி வினோதினி சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.