ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளரும் நீலகிரி மாவட்ட பொறுப்பாளருமான கார்த்திக் தங்கபாலு, ஊட்டி நகர தலைவர் நித்தியசத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைத்தலைவர் கெம்பையா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.