காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வேடசந்தூரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-04-10 19:00 GMT

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேடசந்தூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு வேடசந்தூர் வட்டார தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஜோதிமணி எம்.பி., மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். அதில் சட்டமன்ற தொகுதி முழுவதும் 'எனது வீடு, ராகுல் வீடு' என்ற ஸ்டிக்கரை வீடுகளில் ஒட்டுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பொதுசெயலாளர்கள் மூர்த்தி, பெரியசாமி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ரா.பாண்டியன், பூதிபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பெரியசாமி, வட்டார பொதுச்செயலாளர் பகவான், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரெங்கமலை, முரளிகிருஷ்ணன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் உமாமகேஸ்வரி, குஜிலியம்பாறை வட்டார தலைவர் கோபால்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்