வசந்தகுமார் படத்துக்கு காங்கிரசார் மரியாதை

3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வசந்தகுமார் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

Update: 2023-08-28 20:33 GMT

காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. வசந்தகுமார் 3-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டை- சீவலப்பேரி ரோட்டில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு வர்த்தக காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சேவியர் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ஓ.பி.சி. பிரிவு வக்கீல் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மரம் வியாபாரிகள் சங்க தலைவர் மரியஜான், தொழில் அதிபர்கள் ஜான்சன், அமலன், தி.மு.க. வர்த்தக அணி மைக்கேல் ராஜேஷ் உள்ளிட்டவர்களும் வசந்தகுமார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோன்று நெல்லை கொக்கிரகுளம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட வசந்தகுமார் படத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் நாங்குநேரி அருகே தளபதிசமுத்திரம் மேலூரில் வசந்தகுமார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமை தாங்கி, வசந்தகுமார் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்