ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு

ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-08-20 19:00 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர்கள் உதயகுமார், வெள்ளபாண்டியன், கவி பாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்