உடுமலையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ரெயில் மறியல் போராட்டம்

உடுமலையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-15 17:43 GMT

உடுமலையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரசார் போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதையடுத்து மத்திய அரசு ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கியதுடன் கேரள மாநில வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவித்தது. இதனால் மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்திக்கு ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் உடுமலையில் நேற்று திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்து ெரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. காளிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், ஜனார்த்தனன், கிட்டுசாமி, கண்ணுச்சாமி, நகரத்தலைவர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம்

முன்னதாக ராஜேந்திரா சாலை வழியாக காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கைகளில் கொடியை ஏந்தி கொண்டு ெரயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு தயாராக இருந்த போலீசார் தடுப்புகளை வைத்து அவர்களை ெரயில் நிலையத்தின் உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சியினரின் இந்த போராட்டத்தால் உடுமலை ெரயில் நிலையத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது. இதில் வட்டார தலைவர்கள் கனகராஜ், செல்வகுமார், வெங்கடேஷ், கனகராஜ், சின்னச்சாமி, செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு இன்ஸ்பெக்டர்கள் ராஜா கண்ணன், ராஜேஷ் கண்ணன் தலைமையிலான உடுமலை போலீசார் மற்றும் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்