முதல்-அமைச்சர் கோப்பைக்காக போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

முதல்-அமைச்சர் கோப்பைக்காக போட்டியில் வெற்றி பெற்ற குளித்தலை அரசு கலைக்கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-06-23 18:27 GMT

தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில், கிரிக்கெட் போட்டியில் இக்கல்லூரி இளங்கலை மாணவர்கள் வெண்கல பதக்கமும், நீச்சல் போட்டியில் மாணவி இளவரசி தங்கப்பதக்கமும், தடகள போட்டியில் மாணவி நதியா தங்கம் மற்றும் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து அவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சாதனை படைத்த மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் விளையாட்டுத்துறை பேராசிரியர் (பொறுப்பு) முருகானந்தம், கல்லூரி பேராசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்