செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

வட்டார அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டினர்.

Update: 2022-07-24 18:39 GMT

புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் கிருஷ்ணராயபுரம் வட்டார அளவிலான செஸ் போட்டி உடற்கல்வி ஆசிரியர் செல்வராஜ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான மாணவர்கள் பிரிவில் கோவக்குளம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் சஞ்சய்ராம் 2-வது இடத்தையும், மாணவிகளுக்கான போட்டியில் முதலிடத்தை மாணவி ஜோதிநி, 2-வது இடத்தை மாணவி விசாலி ஆகியோர் பெற்றனர். இதையடுத்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுகுணா, அறிவியல் ஆசிரியர் செல்வராஜ் ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்