10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஓபிஎஸ், அண்ணாமலை வாழ்த்து..!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.;

Update: 2022-06-20 11:18 GMT

சென்னை,

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார். இந்த நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் மனம் தளராமல், அடுத்த தேர்வில்அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், அனைவரின் எதிர்காலம் சிறக்கவும் நல்வாழ்த்துகள்!' என்று கூறியுள்ளார்.


மேலும் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! 'பரிட்சை' - எந்த ஒரு மனிதனையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது. சரித்திரத்தில் இருந்ததுமில்லை.

குறைவான மதிப்பெண் (தங்களுடைய கணக்கின்படி), தேர்ச்சி பெறாத மாணவச் செல்வங்களுக்கு உங்களுடைய அன்பு அண்ணனாக என்னுடைய வேண்டுகோள்-'உங்கள் வாழ்க்கை உங்களுக்காக ஒரு பெரிய கதவைத் திறப்பதற்கு தயாராக இருக்கிறது' துணிவோடு, தைரியமாக பயணியுங்கள்!' என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்