கொங்கு விடுதலைப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-27 20:28 GMT

கொங்கு விடுதலைப்புலிகள் கட்சி சார்பில் ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில நிதிச்செயலாளர் கோபி தலைமை தாங்கினார்.

ஈரோடு ஆலமரத்தெரு மக்களின் நீண்ட கால கோரிக்கையான இலவச பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும். குடியிருப்புதாரர்களின் கூட்டு பட்டாவை மறைத்து கடந்த 4-5-2017-ம் ஆண்டு தேதியிட்ட ஈரோடு மாவட்ட சார்பதிவாளர் அலுவலக கிரைய ஆவணத்தை ரத்து செய்திட வேண்டும். மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா நினைவாக அரசு புறம்போக்கு அல்லது தனியார் நிலத்தினை வாங்கி அதில் அவரது பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்