குரூப்-4 தேர்வு முடிவுகளில் குளறுபடியா? - தேர்வர்கள் குற்றச்சாட்டு
குளறுபடிகளை சரி செய்து, சரியான முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10,100 பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள், 8 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. 18 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வின் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், முடிவுகளைப் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
ஏனெனில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள், ஒட்டுமொத்த தரவரிசையில் கீழ்நிலையில் இருப்பதும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் உயர்நிலையில் இடம் பெற்று இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எந்தவொரு தேர்வு நடந்தாலும், சரியாக எழுதாதவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதும், சரியாக எழுதியவர்கள் பாதிக்கப்படுவதுமான போக்கு தொடர்ந்து நடைபெறுவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குளறுபடிகளை சரி செய்து, சரியான முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.