காதல் விவகாரத்தில் மோதல்:கோவில் கமிட்டி நிர்வாகிகள் 2 பேர் மீது தாக்குதல்
தட்டார்மடம் அருகே காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் கோவில் கமிட்டி நிர்வாகிகள் 2 பேர் மீது தாக்கப்பட்டனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள புத்தன் தருவையை சேர்ந்த இளையபெருமாள் மகன் சபாபதி. இவர் அம்மன் கோவில் நிர்வாக குழுவில் துணைத் தலைவராக உள்ளார். இதே கோவிலில் பால்துரை மகன் தங்கராஜ் என்பவர் நிர்வாக தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு காதல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதே ஊரில் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லிங்கபாண்டி வீட்டுக்கு இந்த 2 பேரும் சென்றனர். ஆகியோர் இந்த விவாகரத்தை பேசி முடிக்க லிங்கபாண்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். பேச்சுவார்த்தையின்போது, லிங்க பாண்டி அவரது மகன் சதீஷ்குமார், அவரது நண்பர்களான திசையன்விளை ஜாஸ்பர், விஜய அச்சம்பாடு முத்துக்குமார் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த லிங்கப்பாண்டி உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சபாபதி, தங்கராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் வழக்குப்பதிவு செய்து லிங்கப்பாண்டி உட்பட 4 பேரையும் கைது செய்தார்.