இரு தரப்பினர் இடையே ேமாதல்; 4 பேர் படுகாயம்

வெம்பக்கோட்டை அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-05 20:45 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரகாட்டம்

வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் கடந்த புதன்கிழமை இரவு காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவினை முன்னிட்டு கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கரகாட்டம் ஆடிய பெண்களிடம் ரூபாய் கொடுக்க முயன்ற இணாம்மீனாட்சிபுரத்தை சேர்ந்த அன்பு உள்பட 5 பேரை துலுக்கன்குறிச்சியினர் வெளியேற்றினர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு செவல்பட்டியில் நடைபெற்ற வைகாசி திருவிழாவில் கரகாட்டம் நிகழ்ச்சி பார்த்துவிட்டு இணாம்மீனாட்சிபுரம் சேர்ந்தவர்கள் திரும்பினர்.

4 பேர் படுகாயம்

அப்போது துலுக்கன்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த மதன் (வயது 24) அருண் (23), அலெக்ஸ் (22) மதன்குமார் (20) ஆகியோரை அன்பு உள்ளிட்ட 5 பேர் கம்பால் சரமரியாக தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த துலுக்கன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இணாம்மீனாட்சி புரத்தைச் சேர்ந்த 5 பேரையும் கைது செய்யக்கோரி சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோடு துலுக்கன்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், போலீசார், ஒன்றிய கவுன்சிலர் முனியசாமி ஆகியோர் பஸ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரச்சினை காரணமான இணாம்மீனாட்சிபுரத்தை 5 பேரையும் கைது செய்வோம் என அவர்கள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்