ரேஷன் அரிசி, மாவு மூட்டைகள் பறிமுதல்
ரேஷன் அரிசி, மாவு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் ரேஷன் அரிசிகளை வாங்கி மாவு அரைத்து அதனை விற்பனை செய்யப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின்படி ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகாசுந்தரம் தலைமையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அரியலூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் சென்று விசாரணை செய்தனர். அப்போது அங்கு சாமிதுரை மகன் சண்முகம்(வயது 45) என்பவர் ரேஷன் அரிசிகளை வாங்கி மாவு குடோனில் 1,350 கிலோ அரிசியும், 20 ஆயிரம் கிலோ மாவு மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மூட்டைகளை பறிமுதல் செய்து சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.