திருக்கோவிலூர் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் சாலையோரம் மூட்டைகளை போட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை

திருக்கோவிலூர் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-18 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள அரியூர் மதுரை அம்மன் கொல்லைமேடு கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணண் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சாலையோரம் 39 மூட்டைகள் கிடந்தன. அதை எடுத்து பார்த்த போது, அனைத்தும் ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றி அரகண்டநல்லூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனுக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை யாரேனும் கடத்தி வந்த போது, அதிகாரிகள் வருகை பற்றி அறிந்தவுடன் அங்கு போட்டுவிட்டு தப்பி சென்று விட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்